புதுமை, மோசடி... போலியான ஏஐ விடியோவுக்கு ரஃபேல் நடால் கவலை!
டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் ஆன்லைனில் ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்ட தனது போலியான விடியோக்கள் சுற்றுவது குறித்து பதிவிட்டுள்ளார்.
தான் அவ்வாறு எதிலும் பங்கேற்கவில்லை என்றும் இது குறித்து ரசிகர்கள் எச்சரியாக இருக்குமாறும் பதிவிட்டுள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் நடால் (39 வயது) 2024 டேவிஸ் கோப்பையுடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
ரஃபேல் நடால் பணம் சம்பாதிப்பது எப்படி என ஒரு விடியோ சமூக வலைதளத்தில் சமீபத்தில் வந்திருந்தது.
சினிமா பிரபலங்கள் பெயரிலும் இப்படியாக ஏஐ மூலம் பல மோசடியான விடியோக்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் அக்ஷய் குமார் நடித்ததாக ஒரு படத்தின் டிரைலரே வெளியாகியது சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில், தனது பெயரில், குரலில் ஆன்லைனில் உலாவரும் போலியான விடியோ குறித்து லின்க்டின் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது:
தேவையான ஆனால் எனது சமூல வலைதளத்தில் புதியதாக இருக்கிறது. பாதுகாப்பு கருதி இந்தக் குறுஞ்செய்தியைப் பகிருகிறேன்.
சில வலைதளங்களில் எனது போலியான விடியோக்கள் இருப்பதை எனது குழுவினர் சமீபத்தில் கண்டறிந்தனர்.
அந்த விடியோக்கள் செய்யறிவினால் உருவாக்கப்பட்டவை. அதில் என்னுடைய புகைப்படம், குரல் போல உருவாக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் எவையும் நான் பேசியதல்ல. அவை எல்லாமே முற்றிலும் தவறான, சம்பந்தமே இல்லாத விளபரங்கள்.
புதுமை என்பது எப்போதும் மக்களுக்கு நல்ல நோக்கத்துடன் வருகிறது. ஆனால், அதன் பாதங்களையும் நாம் சிந்திக்க வேண்டும்.
கல்வி, மருத்துவம், விளையாட்டு, தகவல் தொடர்பு என பலவற்றில் இந்த செய்யறிவு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என கருவி. இருந்தும் இதைத் தவறாக பயன்படுத்தி பலரையும் ஏமாற்ற முடிகிறது என்றார்.