செய்திகள் :

'என் அன்பு நண்பர் லாலேட்டனைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்'- மோகன் லாலை வாழ்த்திய கமல்ஹாசன்

post image

'தாதா சாகேப் பால்கே' விருது பெற்ற மலையாள நடிகர் மோகன் லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

1978 ஆம் ஆண்டு 'திறநோட்டம்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் மோகன் லால் மலையாளத் திரையுலகின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

மோகன் லால்
மோகன் லால்

'லாலேட்டா' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன் லால் மலையாளம் தவிர தமிழ்,தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 400 படங்களுக்கும் மேல் அவர் நடித்திருக்கும் இவர் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர் என பலத் துறைகளிலும் அசத்தி வருகிறார்.

இந்நிலையில்தான் மோகன் லாலுக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்திருக்கிறது.

'தாதா சாகேப் பால்கே' விருது பெற்ற மோகன் லாலுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " என் அன்பு நண்பர் லாலேட்டன் (மோகன் லால்) தாதாசாகேப் பால்கே விருதால் கௌரவிக்கப்பட்டதை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மோகன் லால்
மோகன் லால்

அவரது கலை பல மில்லியன் மக்களின் மனங்களைத் தொட்டிருக்கிறது. மேலும் வருங்கால தலைமுறைகளுக்கும் அது ஊக்கமாக இருக்கும். அவர் இந்த உயரிய அங்கீகாரத்திற்கு தகுதிப் பெற்றவர்தான்" என்று வாழ்த்தியிருக்கிறார்.

"குடியரசுத் தலைவருக்குப் பிடித்த என்னுடைய இரண்டு திரைப்படங்கள்"-நடிகர் மோகன் லால் நெகிழ்ச்சி

71-வது தேசிய விருது வழங்கும் விழா நேற்று (செப் 24) டெல்லியில் நடைபெற்றது.தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக்கான், ஜி.வி. பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்' பட... மேலும் பார்க்க

Dulquer Salmaan: துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்! - `ஆப்ரேஷன் நும்கூர்' நடவடிக்கை!

பூடானிலிருந்து சட்டவிரோதமாக கார்களை இறக்குமதி செய்வதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நடிகர்கள் ப்ரித்விராஜ், துல்கர் சல்மான், மம்மூட்டி வீடுகளில் `ஆபரேஷன் நம்கோர்' என்ற பெயரில் சுங்கத்துறை சோதனை ந... மேலும் பார்க்க

Mohan Lal: ``சினிமாதான் என் ஆன்மாவின் இதயத் துடிப்பு'' - விருது பெறும் மேடையில் மோகன் லால்

71-வது தேசிய விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக்கான், ஜி.வி. பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்' பட இயக்குநர்... மேலும் பார்க்க

`ஆப்ரேஷன் நம்கூர்' - துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை சோதனை; பரபரக்கும் கேரளா

நடிகர் துல்கர் சல்மான், நடிகர் பிருத்விராஜ் வீடுகளில் ஆபரேஷன் நம்கூர் திட்டத்தின் ஒரு பகுதியாக சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வரி செலுத்தாமல் பூட்டான் வழியாக... மேலும் பார்க்க

Drishyam 3: பூஜையுடன் `த்ரிஷ்யம் 3' படப்பிடிப்பு தொடங்கியது; உடனடியாக டெல்லிக்கு விரைந்த மோகன் லால்!

Aமிகவும் எதிர்பார்க்கப்பட்ட `த்ரிஷ்யம் 3' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. முதல் இரண்டு பாகங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த மூன்றாம் பாகத்திற்கு பெருமளவில் எதிர்பார்ப்பு நிலவி ... மேலும் பார்க்க

Lokah: ``துல்கர் சல்மான் சார் என்னோட ஃபேன்னு சொன்னார்”- துர்கா வினோத் பேட்டி

நாயகியை மையப்படுத்திய படம் இதுவரை இப்படியொரு வரவேற்பையும் வசூல் சாதனையையும் படைத்ததில்லையே என திரையுலகை மிரள வைத்துக்கொண்டிருக்கிறது ‘லோகா’ (Lokah Chapter 1: Chandra). படத்தில் நீலியாக நாயகி கல்யாணி ப... மேலும் பார்க்க