Idly Kadai: " `என்னை அறிந்தால்'-க்கு அப்புறம் இட்லி கடைல வில்லனா நடிச்சிருக்கேன்...
மகாராஷ்டிரத்தில் 6 நக்சல்கள் சரண்!
மகாராஷ்டிரத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 6 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
கட்சிரோலி மாவட்டத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 6 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப். 24) சரணடைந்துள்ளனர்.
இந்த நிலையில், மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவராக அறியப்படும், பீமண்ணா (எ) சுக்லால் முட்டய்யா குல்மெதே (வயது 58) மற்றும் அவரது மனைவி விமலக்கா சாத்மேக் (56) ஆகியோரும் சரணடைந்துள்ளனர். இவர்கள், இருவரையும் பிடிக்க காவல் துறையினர் தலா ரூ.16 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தனர்.
முன்னதாக, கட்சிரோலி மாவட்டத்தில் மட்டும் 716 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில், இன்று மட்டும் கூட்டாக ரூ.64 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 30 பேர் உள்பட 71 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிபிஎஸ்இ 10, +2 பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும்?