Idly Kadai: " `என்னை அறிந்தால்'-க்கு அப்புறம் இட்லி கடைல வில்லனா நடிச்சிருக்கேன்...
ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 20% உயர்வு!
புதுதில்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையான முதல் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் அதன் வருவாய் 35.5% உயர்ந்து ரூ.828 கோடியாக உள்ளதாக தெரிவித்ததையடுத்து, திங்கட்கிழமை ஓலா எலக்ட்ரிக் பங்குகள் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் உயர்ந்தன.
பிஎஸ்இ-யில் அதன் பங்கின் விலை 18.36 சதவிகிதம் உயர்ந்து ரூ.47.13 ஆக முடிந்தது. இதுவே பகலில் 19.98 சதவிகிதம் உயர்ந்து ரூ.47.78 ஆக இருந்தது.
என்எஸ்இ-யில் 19.74 சதவிகிதம் உயர்ந்து ரூ.47.66 ஆக இருந்தது.
பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனம், 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்தம் 68,192 வாகனங்களை டெலிவரி செய்துள்ளதாகவும், அதுவே 2025 நிதியாண்டின் 4-வது காலாண்டில் 51,375 வாகனமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: தொடர்ந்து 4-வது நாளாக சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!