செய்திகள் :

ரஷியாவிலுள்ள ஆயிரக்கணக்கான உக்ரைன் குழந்தைகளை எப்போது மீட்கப் போகிறோம்? -ஸெலென்ஸ்கி

post image

உக்ரைனிலிருந்து ரஷிய படைகளால் நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளை எப்போது மீட்கப் போகிறோம்? என்று உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி வினவியுள்ளார்.

இது குறித்து நியூயாா்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு பொது விவாதத்தில் புதன்கிழமை(செப். 24) ஸெலென்ஸ்கி பேசும்போது: “எங்கள் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நீடிக்கிறது. இதனால் இன்றளவும் வாரவாரம் மக்கள் உயிரிழப்பைச் சந்திக்கின்றனர். எனினும், போர்நிறுத்தம் ஏற்படவில்லை. காரணம், ரஷியா. ரஷியா போர்நிறுத்தத்தை நிராகரித்து வருகிறது.

ஆயிரக்காணக்கான உக்ரைன் குழந்தைகளை ரஷியா கடத்திச் சென்றுள்ளது. அவர்களில் சிலரை மட்டுமே மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். உதவிய அனைவருக்குமே நன்றியை உரித்தாக்குகிறேன். ஆனால், அவர்கள் அனைவரையும் மீட்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்? அவர்களை நாம் மீட்பதற்குள் தங்கள் குழந்தைப் பருவத்தை அவர்கள் கடந்துவிடுவர் போலத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Ukraine President Volodymyr Zelenskyy, addressing the 80th UNGA General Debate, "Russia abducted thousands of Ukrainian children, and we have managed to bring some of them back.”

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய யேமனின் ட்ரோன்கள்! 20 பேர் படுகாயம்!

இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து எயிலாட் நகரத்தின் மீது இன்று (செப்.... மேலும் பார்க்க

கிரீன்லாந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கும் டென்மார்க் பிரதமர்! என்ன காரணம்?

டென்மார்க் அரசின் தன்னாட்சி பகுதியான கிரீன்லாந்தின் இனுயிட் மக்களிடம் மன்னிப்பு கேட்க, டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் தலைநகர் நூக்கிற்கு சென்றுள்ளார். கிரீன்லாந்தின் பூர்வீக மக்களான இனுயிட் ப... மேலும் பார்க்க

புதினைத் தடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும்: உக்ரைன் அதிபர்

ரஷியாவைத் தடுத்து நிறுத்த ஐ. நா. நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும் என்று உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை... மேலும் பார்க்க

பப்ஜியால் நேர்ந்த கொடூரம்! குடும்பத்தினர் 4 பேரைக் கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தானில், கடந்த 2022 ஆம் ஆண்டு பப்ஜி மோகத்தினால் தாய் உள்பட குடும்பத்தினர் 4 பேரைச் சுட்டுக்கொன்ற சிறுவனுக்கு, இன்று (செப். 24) 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லாகூரின் கஹ்னா பகுதி... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்பை சந்திக்க வாஷிங்டன் செல்கிறார் பாக். பிரதமர்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் வாஷிங்டன் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க, பாகிஸ்தான் பிரதமர் ஷ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் தாக்குதல்! பெட்டிகள் தடம் புரண்டதில் 12 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் இருந்து பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டவை நோக்கி, 270 பயணிகளுடன் ஜாஃபர்... மேலும் பார்க்க