Idly Kadai: " `என்னை அறிந்தால்'-க்கு அப்புறம் இட்லி கடைல வில்லனா நடிச்சிருக்கேன்...
எச்-1பி விசா கட்டண உயர்வு எதிரொலி: ஐடி பங்குகள் சரிவு!
புதுதில்லி: எச்1பி விசா கட்டண உயர்வு ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து ஐடி துறை பங்குகள் தொடர்ந்து அழுத்தத்தில் இருந்தன.
இது முதலீட்டாளர்களின் மனநிலையை தொடர்ந்து பாதித்து வந்ததால் இன்றைய வர்த்தகத்திலும் ஐடி குறியீடுகள் சரிந்து முடிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில், மாஸ்டெக் பங்குகள் 3.42 சதவிகிதமும், இன்போபீன்ஸ் டெக்னாலஜிஸ் 3.41 சதவிகிதமும், விப்ரோ 2.06 சதவிகிதமும், டெக் மஹிந்திரா 1.30 சதவிகிதமும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 0.86 சதவிகிதம் மற்றும் இன்போசிஸ் 0.24 சதவிகிதம் சரிந்தன.
பிஎஸ்இ ஐடி குறியீடு 0.69 சதவிகிதம் குறைந்து 34,529.91 ஆக இருந்தது.
இதையும் படிக்க: ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 20% உயர்வு!