Idly Kadai: " `என்னை அறிந்தால்'-க்கு அப்புறம் இட்லி கடைல வில்லனா நடிச்சிருக்கேன்...
திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று (செப். 24) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது.
பிரம்மனால் தொடங்கப்பட்ட அல்லது நடத்தப்பட்ட விழா என்பதால் இதற்கு பிரம்மன் உற்சவம் என்று பெயா் பெற்றது. அது தற்போது மருவி பிரம்மோற்சவம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
ஏழுமலையானுக்கு 11 மாதங்கள் நிறைவு பெற்றவுடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி. முதலில் வருவது வருடாந்திர பிரம்மோற்சவம் என்றும், இரண்டாவதாக வருவது நவராத்திரி பிரம்மோற்சவம் என்றும் கணக்கில் கொள்ளப்படுகிறது. நவராத்திரி பிரம்மோற்சவத்தில் கொடியேற்றமும் கொடியிறக்கமும் கிடையாது.
இந்த நிலையில், திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்கி வரும் அக்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இன்று மாலை சாஸ்திரப்படி கொடியேற்றம் நடைபெற்றது. ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் தங்கக் கொடி மரத்தில் கருடபட்டத்தை கஜமாலையில் சுற்றி ஏற்றிவைத்தனர்.
பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் இரவு தங்க திருச்சி உற்சவத்துக்குப் பிறகு கொடியிறக்கம் நடைபெறுவது வழக்கம். உற்சவம் முடிந்த பின் முப்பத்து முக்கோடி தேவர்களை வழியனுப்பும் விதமாக கொடியிறக்கம் நடைபெறுகிறது. இத்துடன் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நிறைவடைகிறது.
பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செப்.28-இல் கருடசேவையை முன்னிட்டு, மலைப்பாதைகளில் இருசக்கர வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பிரமோற்சவம் கொடியேற்றம்!