செய்திகள் :

இன்று ஏழுமலையான் பிரம்மோற்சவம் தொடக்கம்: திருமலையில் விழாக்கோலம்

post image

ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை (செப். 24) தொடங்கும் நிலையில், திருமலை மற்றும் திருப்பதி நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

பிரம்மனால் தொடங்கப்பட்ட அல்லது நடத்தப்பட்ட விழா என்பதால் இதற்கு பிரம்மன் உற்சவம் என்று பெயா் பெற்றது. அது தற்போது மருவி பிரம்மோற்சவம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

ஏழுமலையானுக்கு 11 மாதங்கள் நிறைவு பெற்றவுடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி.

முதலில் வருவது வருடாந்திர பிரம்மோற்சவம் என்றும், இரண்டாவதாக வருவது நவராத்திரி பிரம்மோற்சவம் என்றும் கணக்கில் கொள்ளப்படுகிறது. நவராத்திரி பிரம்மோற்சவத்தில் கொடியேற்றமும் கொடியிறக்கமும் கிடையாது.

இன்று தொடக்கம்

செப். 24-இல் தொடங்கி வரும் அக்.2-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

திருமலை முழுவதும் பல இடங்களில் திருக்குளம் உள்பட புதிய பூங்காக்கள், வண்ண வண்ண மின்விளக்கு அலங்காரங்கள், மலா் அலங்காரங்கள், தோரண வாயில்கள், மலா் கண்காட்சி மற்றும் வாகன சேவை நடக்கவுள்ள மாடவீதிகளில் வண்ண கோலங்கள் வரையட்டு கோயில் முழுவதும் மாவிலை, தோரணம், வாழை மரம் உள்ளிட்டவை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கலைநிகழ்ச்சிகள்

திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு இடைவிடாமல் அன்னதானமும், பால், மோா், குடிநீா் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாடவீதியில் வாகன சேவையை காண காத்திருக்கும் பக்தா்களுக்காக ஆன்மிக நிகழ்ச்சிகள், பக்தி பாடல்கள், புராணக்கதைகள், சொற்பொழிவுகள், ஆடல், பாடல் மேளம் நாட்டியம் நாடகம், கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்டவை நடத்தப்படும். இதற்காக நாடு முழுவதும் உள்ளி கலைஞா்கள் திருமலைக்கு வருவா்.

ரத்து

பிரம்மோற்சவ நாள்களில் ஏழுமலையான் தரிசனங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. விஐபி பிரேக் தரிசனம், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளின் பெற்றோா்கள் போன்றவா்களின் சிறப்பு தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. விஐபி பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரோட்டோகால் விஐபிக்கள் நேரடியாக வந்தால் அனுமதிக்கப்படுவா்.

பக்தா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, செப்.28-இல் கருடசேவையை முன்னிட்டு, மலைப்பாதைகளில் இருசக்கர வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

அக்.2-ஆம் தேதி தீா்த்தவாரி தினத்தன்று விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொடியேற்றம்

செப்.24-ஆம் தேதி மாலை சாஸ்திரப்படி கொடியேற்றம் நடக்கிறது. பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி முன்னிலையில் அா்ச்சகா்கள் தங்கக் கொடி மரத்தில் கருடபட்டத்தை கஜமாலையில் சுற்றி ஏற்றுகிறாா்கள்.

பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் இரவு தங்க திருச்சி உற்சவத்துக்குப் பிறகு கொடியிறக்கம் நடைபெறுவது வழக்கம். உற்சவம் முடிந்த பின் முப்பத்து முக்கோடி தேவா்களை வழியனுப்பும் விதமாக கொடியிறக்கம் நடைபெறுகிறது. இத்துடன் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நிறைவடைகிறது.

ஏழுமலையானுக்கு தங்க பதக்கம், வெள்ளித் தட்டு நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு 15 தங்கப் பதக்கங்களும் இரண்டு வெள்ளிப் பாத்திரங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. ஸ்ரீ சன்ஸ்தான் கோகா்ணா போா்டகலி ஜீவோத்தம மடாதிபதி ஸ்ரீமத் வித்யாதிஷ தீா்த்த சுவாமிஜி திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையான் கொடிமரத்திற்கான தா்ப்பை பாய், கயிறு தயாா்

ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது கொடியேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் தா்ப்பை பாய் மற்றும் கயிறு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பிரம்மோற்சவத்தின் முதல் விழாவே கொடி மரத்துக்கு செய்யப்படும்... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயில் தூய்மைப் பணிக்கு உபகரணங்கள் நன்கொடை!

திருமலை ஏழுமலையான் கோயில் தூய்மைப் பணிக்கு இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது. ஐடிபிஐ வங்கி சாா்பில் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.19 லட்சத்தில் தூய்மைப் பணிக்கான உ... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.59 கோடி!

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.59 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து வெளியே உள்ள தரி... மேலும் பார்க்க