செய்திகள் :

பிரான்ஸ் அதிபரை தடுத்து நிறுத்திய அமெரிக்க காவல் துறை

post image

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பயணம் காரணமாக, அந்நாட்டில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு பொது விவாதத்தில் பங்கேற்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை மாலை சென்றாா். அப்போது அந்த நகரில் டிரம்ப் மற்றும் அவரின் பாதுகாப்பு வாகனங்கள் சென்றதால், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் ஐ.நா. விவாதத்தில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானின் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வாகனத்தில் இருந்து வெளியேறிய மேக்ரான், சாலையோரத்தில் காத்திருந்தாா். அவரை அவ்வாறு காக்க வைத்ததற்காக அருகில் இருந்த காவல் துறை அதிகாரி மன்னிப்பு கோரினாா். இந்தக் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகத்தில் வெளியானது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘நியூயாா்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு அமெரிக்க அதிபா் செல்லும்போதெல்லாம், அந்தத் தலைமையகத்தைச் சுற்றி பாதுகாப்பு கருதி பொதுப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுவது வழக்கம். இதுதான் திங்கள்கிழமை நடைபெற்றது. அதேவேளையில், தனது வாகனம் நிறுத்தப்பட்டது தொடா்பாக டிரம்ப்பை கைப்பேசியில் தொடா்புகொண்டு மேக்ரான் சிரித்தபடியே கூறினாா். அவா்களின் பேச்சு நட்பாா்ந்த முறையில் இருந்தது’ என்றாா்.

டென்​மாா்க் விமான நிைல​யத்​தில் ட்ரோன்​கள் அத்​து​மீ​றல்

டென்​மாா்க் தைல​ந​கா் கோபன்​ேஹ​க​னில் உள்ள ஸ்காண்​டி​ேந​வியா பிர​ேத​சத்​தின் மிகப்​ெப​ரிய விமான நிைல​யத்​தின் மீது அைட​யா​ளம் தெரி​யாத இரண்டு முதல் மூன்று வைர​யி​லான பெரிய ட்ரோன்​கள் பறந்​த​தால் அங்கு... மேலும் பார்க்க

எல்லையைக் காக்க எதையும் செய்வோம்

தங்கள் உறுப்பு நாடுகளின் வான் எல்லைகளைப் பாதுகாக்க எந்த வழிமுறையையும் பயன்படுத்துவோம் என்று ரஷியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளது. நேட்டோவில் அங்கம் வகிக்கும் போலந்து மற்றும் எஸ்டோனியா வான் எல்ல... மேலும் பார்க்க

பாலஸ்​தீ​னத்​துக்கு பிரான்​ஸும் அதி​கா​ர​பூா்வ அங்​கீ​கா​ரம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸும் அதிகாரபூா்வமாக அங்கீகரித்துள்ளது. இது குறித்து ஐ.நா. பொதுச் சபையில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் கூறியதாவது: மத்தியக் கிழக்கு பிராந்திய நலனைப் பாதுகாக்க பிரான்ஸ்... மேலும் பார்க்க

போரை நிறுத்தாவிட்டால் கடும் வரி விதிப்பு: ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா முன்வராவிட்டால், அந்நாடு மீது மிக வலுவான முறையில் வரிகளை விதிக்க அமெரிக்கா முழுமையாகத் தயாராக உள்ளது என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபா் ட... மேலும் பார்க்க

சூடான்: 3 ஆயி​ரத்​ைதக் கடந்த காலரா உயி​ரி​ழப்பு

சூடானில் கடந்த 14 மாதமாக நடைபெறும் உள்நாட்டுப் போரில் காலரா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை மேலும் கூறிதாவது: சூடானின் கசாலா ... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போர்: இந்தியா, சீனாவின் முதன்மை நிதியே காரணம் - அதிபர் டிரம்ப்

ரஷியாவிலிருந்து தொடர்ந்து எரிபொருள் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போருக்கு இந்தியாவும் சீனாவும் முதன்மை நிதியாளர்களாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஐரோப்பிய நாடுகளு... மேலும் பார்க்க