செய்திகள் :

சூடான்: 3 ஆயி​ரத்​ைதக் கடந்த காலரா உயி​ரி​ழப்பு

post image

சூடானில் கடந்த 14 மாதமாக நடைபெறும் உள்நாட்டுப் போரில் காலரா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை மேலும் கூறிதாவது:

சூடானின் கசாலா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பரவத் தொடங்கிய காலரா தொற்று, அசுத்த உணவு மற்றும் நீரால் 18 மாகாணங்களுக்கு பரவியது. வடக்கு டாா்ஃபூரில் சுமாா் 4 லட்சம் பேருக்கு காலாரா தடுப்பூசி போடப்பட்டது. டாா்ஃபூரில் 12,739 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 358 போ் உயிரிழந்தனா் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.

போரை நிறுத்தாவிட்டால் கடும் வரி விதிப்பு: ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா முன்வராவிட்டால், அந்நாடு மீது மிக வலுவான முறையில் வரிகளை விதிக்க அமெரிக்கா முழுமையாகத் தயாராக உள்ளது என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபா் ட... மேலும் பார்க்க

ரஷியா - உக்ரைன் போர்: இந்தியா, சீனாவின் முதன்மை நிதியே காரணம் - அதிபர் டிரம்ப்

ரஷியாவிலிருந்து தொடர்ந்து எரிபொருள் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போருக்கு இந்தியாவும் சீனாவும் முதன்மை நிதியாளர்களாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஐரோப்பிய நாடுகளு... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: ஐ.நா. அவையில் 50வது முறை கூறிய டிரம்ப்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க தனக்கு வேண்டும் என சிலர் கூறுவதாகவும், ஆனால், போர் இல்லாத உலகில்,... மேலும் பார்க்க

சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாகியிருக்கும் மனிதநேயம்..! -ஐ.நா. தலைவர் வேதனை

உலகத் தலைவர்களுக்கு ஐ.நா. தலைவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், மனிதநேயமானது இப்போது கடுமையான இடைஞ்சல் மற்றும் சொல்லொணாத் துயரம் நிறைந்ததொரு காலக்கட்டத்துக்குள் நுழைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஐ. ... மேலும் பார்க்க

நியூயார்க்கில் உலகத் தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு: தகவல் தொடர்பைத் துண்டிக்க சதி!

நியூயார்க்கில் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தகவல் தொடர்பைத் துண்டிக்க பெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.நியூயார்க்கில் விரைவில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக் கூட... மேலும் பார்க்க

ஹமாஸ் கடற்படையின் துணைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!

பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் அமைப்பின் கடற்படை துணைத் தளபதியைக் கொன்றுவிட்டதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் ... மேலும் பார்க்க