Ind vs Ban: "இந்தியாவை வீழ்த்தும் திறன் எல்லா அணிகளுக்கும் இருக்கிறது"- வங்காளதே...
சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாகியிருக்கும் மனிதநேயம்..! -ஐ.நா. தலைவர் வேதனை
உலகத் தலைவர்களுக்கு ஐ.நா. தலைவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், மனிதநேயமானது இப்போது கடுமையான இடைஞ்சல் மற்றும் சொல்லொணாத் துயரம் நிறைந்ததொரு காலக்கட்டத்துக்குள் நுழைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐ. நா. தலைவர் ஆண்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருப்பதாவது: "80 ஆண்டுகளுக்கு முன், போர்களால் வறுத்தெடுக்கப்படதொரு உலகத்தில், தலைவர்களானவர்கள் ஒரு விருப்பத்தின்பால் முடிவெடுத்தார்கள். அதன்கீழ், வீண் சச்சரவுக்கு பதிலாக ஒத்துழைப்பு; சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு பதில் சட்டம் நிலைத்தன்மை; சண்டைக்கு பதில் அமைதி.
அந்தத் தலைவர்களின் விருப்பதாலேயே ஐக்கிய நாடுகள் அவை என்ற ஒன்று பிறக்க வழிவகுக்கப்பட்டது. மனிதநேயம் நீடித்திருக்க தேவையான செயல்திட்டமாக ஐ. நா. உருவாக்கப்பட்டது.
வெறுமனே ஆலோசனை நடத்துவதற்காகக் கூடும் அரங்கம் அல்ல ஐ. நா., அதிலினும் மேலானது. இதுவொரு, அமைதியை நிலைநாட்டும், வலியுறுத்தும் சக்தி.
சர்வதேச சட்டத்தின் பாதுகாவலன். மேம்பாட்டுக்கான தூண்டுகோள், இன்னல்களில் அல்லல்படும் மக்களுக்கான உயிர்நாடி. மனித உரிமைகளுக்கான ஒளி கோபுரம். உறுப்பு நாடுகளின் முடிவுகளை செயல் வடிவமாக்கும் மையம் இது” என்றார்.