Ind vs Ban: "இந்தியாவை வீழ்த்தும் திறன் எல்லா அணிகளுக்கும் இருக்கிறது"- வங்காளதே...
இரவில் சென்னை, 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அடுத்த மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, நெல்லை, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோன்று, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜை சிறப்புச் சந்தை: அமைச்சர் சேகர்பாபு