Ind vs Ban: "இந்தியாவை வீழ்த்தும் திறன் எல்லா அணிகளுக்கும் இருக்கிறது"- வங்காளதே...
`அவர்கள் இனி எங்கள் ரைவல்ரி இல்லை' - India - Pakistan குறித்து சூர்யகுமார் யாதவ்
கடந்த (சனிக்கிழமை, செப் 21) துபாயில் நடைபெற்ற ஆசியா கோப்பை 2025 தொடரின் சூப்பர் 4 போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக, செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தானை கடுமையாக இகழும்படி பதிலளித்துள்ளார் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

பாகிஸ்தானின் செயல்திறன் மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான வரலாற்றுப் பூர்வமான போட்டி மனப்பான்மை (Rivalry (ரைவல்ரி)) பற்றி கேட்கப்பட்டபோது, "இந்த கேள்வி குறித்து நான் பேச விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும் India - Pakistan ரைவல்ரி குறித்து கேட்பதை நிறுத்த வேண்டும்" என்றார் சூர்யகுமார் யாதவ்.
மேலும், "என்னைப்பொறுத்தவரை இரண்டு அணிகள் 15-20 போட்டிகள் விளையாடுகின்றனர். வெற்றி விகிதம் 7-7 அல்லது 7-8 என இருந்தால் அது நல்ல கிரிக்கெட், அதை ரைவல்ரி என அழைக்கலாம். ஆனால் 13-0, 10-1 என இருக்கும்போது, இது இனி ரைவல்ரி இல்லை. நாங்கள் அவர்களை விட சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினோம், நன்றாக பந்துவீசினோம்" என்றார்.

ஆசிய கோப்பை 2025ல் 8 நாட்களில் இரண்டு முறை பாகிஸ்தானை வெற்றி பெற்றுள்ளது இந்தியா. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான 31 போட்டிகளில் 23 வெற்றிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது இந்தியா.
எனினும் ரைவல்ரியின் தன்மையை 15 ஆண்டுகளை வைத்து முடிவுசெய்யக் கூடாது என்கின்றனர் பாகிஸ்தான் ரசிகர்கள். இரு நாடுகள் இடையிலான இதுவரையிலான ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் 88 போட்டிகளை வென்றுள்ளதாகவும், இந்தியா 75 வெற்றிகளை மட்டுமே பெற்றிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் ரைவல்ரி குறித்த உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்!