செய்திகள் :

Dhoni: ``தோனியை இப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எல்லா வீரர்களின் கனவு'' - டெவோன் கான்வே ஓபன்

post image

இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி,  சர்வதேசப் போட்டிக்கு முழுக்கு போட்டு 6 வருடங்கள் ஆனாலும், ஐ.பி.எல்லில் இன்னமும் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார்.

`44 வயதில் எதற்கு அணியில் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வழிவிட்டுச் செல்லலாமே' என்ற குரல்கள் ஒருபுறம் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

தோனி
தோனி

அதேவேளையில், `இந்திய அணிக்கு மூன்று விதமான ஐ.சி.சி கோப்பைகளை கேப்டனாக முன்னின்று வென்று கொடுத்தவருக்கு தேசிய அணியில்தான் முறையான விடைபெறல் கிடைக்கவில்லை.

ஐ.பி.எல்லில் அது கிடைக்க வேண்டும். அதற்கு முழு தகுதியுடையவர் அவர்.

அந்த சரியான தருணம் வரும் வரையில், அவர் விரும்பும் வரையில் எத்தனை சீசன்கள் ஆடினாலும் ரசிப்போம், ஆதரிப்போம்' என்ற குரல்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

கடந்த சில சீசன்களாக பேட்டிங்கில் அணிக்கு அவரால் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்ய முடியவில்லை என்றாலும், எந்த மைதானத்துக்குச் சென்றாலும் அவர் பேட்டிங் ஆடும் ஓரிரு பந்துகளுக்காகவே ரசிகர்கள் படையெடுக்கின்றனர்.

அந்த வரவேற்பைக் கண்டு களத்தில் எதிரணி வெளிநாட்டு வீரர்களே வியந்தார்கள் என்பதில் மிகையேதுமில்லை.

தோனி - டெவான் கான்வே
தோனி - டெவான் கான்வே

இந்த நிலையில், சி.எஸ்.கே அணி கடைசியாக 2023 சீசனில் கோப்பை வென்றதற்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவரான டெவான் கான்வே, தோனி குறித்து பேசியிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய டெவான் கான்வே, "தோனி பேட்டிங் செய்ய களமிறங்கும்போது அந்தச் சூழலே பிரமிப்பாக இருக்கும்.

தோனி விளையாடுவதை எதிர்முனையில் இருந்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும்" என்று கூறினார்.

Ind Vs Pak: இந்தியாவுக்கெதிரான போட்டியில் சர்ச்சையான AK 47 செலிப்ரேஷன்; பாக்., வீரர் விளக்கம் என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா வென்றது.இப்போட்டியில் பாகிஸ்தான் அணியினர், லீக் சுற்றில் இந்தியாவிடம் மோசமா... மேலும் பார்க்க

Ind vs Pak: போராடித் தோற்ற பாகிஸ்தான்; மீண்டும் கைகுலுக்காமல் சென்ற இந்திய வீரர்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை தொடரில், சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 21) மோதின.ஏற்கெனவே செப்டம்பர் 14-ம் தேதி லீக் சுற்றில் இரு அணிகளும் மோதியபோது... மேலும் பார்க்க

Mithun Manhas: BCCI-யின் புதிய தலைவர் இவரா? நாமினேஷன் செய்த முன்னாள் CSK வீரர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி கடந்த ஜூலையில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் தாமாக முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக,... மேலும் பார்க்க

கிங் கோலியின் ஆல் டைம் ரெக்கார்டை தகர்த்த குயின் மந்தனா; ஆஸ்திரேலியாவைப் புரட்டியெடுத்த ஸ்மிருதி!

இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியா vs இலங்கை போட்டியுடன் தொடங்கவிருக்கிறது.அதற்கு முன்பாக, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ... மேலும் பார்க்க

Dunith Wellalage: தந்தைக்கு நேற்று இறுதியஞ்சலி; இரவோடு இரவாக ஆசிய கோப்பைக்கு திரும்பிய இலங்கை வீரர்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பைத் தொடர் சூப்பர் 4 சுற்றை எட்டியுள்ளது.குரூப் A-ல் 3 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த இந்தியாவும், 2 வெற்றிகளுடன் இரண்டாமிடம் பிடித்த பாகிஸ்தானும், குரூப... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: டஃப் கொடுத்த ஓமன்; 21 ரன் வித்தியாசத்தில் வெற்றியை அள்ளிய இந்திய அணி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று அபுதாபியில் 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் நடந்தது. அதில் இந்தியாவும், ஓமனும் மோதிக்கொண்டன. 188 ரன்களைக் குவித்த இந்திய அணி! 'டாஸ்' வென்ற... மேலும் பார்க்க