செய்திகள் :

Dunith Wellalage: தந்தைக்கு நேற்று இறுதியஞ்சலி; இரவோடு இரவாக ஆசிய கோப்பைக்கு திரும்பிய இலங்கை வீரர்!

post image

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பைத் தொடர் சூப்பர் 4 சுற்றை எட்டியுள்ளது.

குரூப் A-ல் 3 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த இந்தியாவும், 2 வெற்றிகளுடன் இரண்டாமிடம் பிடித்த பாகிஸ்தானும், குரூப் B-ல் 3 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த இலங்கையும், 2 வெற்றிகளுடன் இரண்டாமிடம் பிடித்த வங்காளதேசமும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.

Asia Cup - ஆசிய கோப்பை
Asia Cup - ஆசிய கோப்பை

இந்தச் சுற்றில் தலா 3 போட்டிகளில் ஆடும் அணிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 28-ம் தேதி ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோதும்.

இந்த சுற்றின் முதல் போட்டியில் இலங்கையும், வங்காளதேசமும் இன்று மோதுகின்றன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 18) ஆப்கானிஸ்தானுடனான போட்டியின்போது தனது தந்தையை இழந்த இலங்கை இளம் ஆல்ரவுண்டர் வீரர் துனித் வெல்லாலகே, நேற்று தன் தந்தைக்கு இறுதியஞ்சலி செலுத்திய இரவே துபாய்க்கு கிளம்பிய நிகழ்வு பலரை நெகிழ வைத்திருக்கிறது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், "மறைந்த தன் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாடு திரும்பிய துனித் வெல்லாலகே, நாளை காலை மீண்டும் அணியுடன் இணைவார்.

அணி மேலாளர் மஹிந்தா ஹலங்கோடுடன் இன்றிரவு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பயணம் மேற்கொள்வார்.

இலங்கை அணி நாளை (செப்டம்பர் 20) வங்காளதேசத்துக்குடனான போட்டியுடன் சூப்பர் 4 சுற்றைத் தொடங்கும்.

இப்போட்டிக்கு வெல்லாலகே தயார் நிலையில் இருப்பார்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம் இலங்கையுடனான போட்டியில் முதல் இன்னிங்ஸில் வெல்லாலகே வீசிய கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, இரண்டாவது இன்னிங்ஸின்போது வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை: டஃப் கொடுத்த ஓமன்; 21 ரன் வித்தியாசத்தில் வெற்றியை அள்ளிய இந்திய அணி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று அபுதாபியில் 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் நடந்தது. அதில் இந்தியாவும், ஓமனும் மோதிக்கொண்டன. 188 ரன்களைக் குவித்த இந்திய அணி! 'டாஸ்' வென்ற... மேலும் பார்க்க

"விரோத நாட்டின் கூச்சல்களுக்கு கவனம் செலுத்த வேண்டாம்" - IND vs PAK விவகாரத்தில் BCCI செயலாளர்

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் (செப்டம்பர் 14) வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்ற விவகாரம் பெரும் விவாதத்தைத் தூண்டியது.ஒருபக்கம் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

இந்திய அணியின் நியூ ஸ்பான்சர் Apollo Tyres; ஒரு போட்டிக்கு ரூ.4.5 கோடி, முழு ஒப்பந்தத் தொகை எவ்வளவு?

நாடாளுமன்றத்தில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கும் ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025, இரண்டே நாளில் நி... மேலும் பார்க்க

"தோனிதான் மோடியிடம் என்னை அறிமுகம் செய்தார்; அன்று அவர் கூறிய..." - முதல் சந்திப்பு குறித்து ஜடேஜா

இந்திய அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ரவீந்திர ஜடேஜா ஆடி வருகிறார்.தற்போது இங்கிலாந்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியைத் தழுவாமல் தொடரை சமன் செய்ததில் ஜடேஜாவின் ஆட்டம் ... மேலும் பார்க்க

IND vs PAK: "அவ்வாறு சட்டம் ஒன்றும் இல்லை" - இந்திய வீரர்களின் செயலை நியாயப்படுத்தும் BCCI அதிகாரி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்த சம... மேலும் பார்க்க

IND vs PAK: "இதற்காகத்தான் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது" - மத்திய அமைச்சர் ஓபன் டாக்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என்று பல தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தன. இப்போதும் வந்து கொண்டிருக்கிறது.இத்தகைய சூழலில், ஐக்கிய அரபு அ... மேலும் பார்க்க