செய்திகள் :

"தோனிதான் மோடியிடம் என்னை அறிமுகம் செய்தார்; அன்று அவர் கூறிய..." - முதல் சந்திப்பு குறித்து ஜடேஜா

post image

இந்திய அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக ரவீந்திர ஜடேஜா ஆடி வருகிறார்.

தற்போது இங்கிலாந்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியைத் தழுவாமல் தொடரை சமன் செய்ததில் ஜடேஜாவின் ஆட்டம் மிக முக்கியமாக அமைந்தது.

குஜராத்தைச் சேர்ந்தவரான ஜடேஜா, பிரதமர் மோடியை முதல்முறையாகச் சந்தித்தது குறித்தும், அப்போது அவர் சொன்ன வார்த்தை குறித்தும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மோடியுடன் இந்திய வீரர் ஜடேஜா மற்றும் அவரின் மனைவியும் பாஜக எம்.எல்.ஏ-வுமான ரிவாபா
ஜடேஜா - மோடி - ரிவாபா

தனது ட்வீட்டில் ஜடேஜா, "மோடியை முதல்முறையாக 2010-ல் அவர் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது சந்தித்தேன். அன்று அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகப் போட்டி.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு அணியினரும் மைதானத்தில் வரிசையாக நின்றனர்.

மோடி வந்து அனைத்து வீரர்களுடனும் கைகுலுக்கினார். அப்போதுதான் அவரை நான் முதல்முறையாகச் சந்தித்தேன்.

அப்போது கேப்டனாக இருந்த தோனி அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

மோடி புன்னகையுடன் தோனியிடம், "அவரை பார்த்துக் கொள்ளுங்கள். அவர் எங்கள் பையன்" என்றார்.

அத்தகைய நிலையிலிருக்கும் ஒருவரிடமிருந்து, என் அணியின் முன் வந்த அந்த எளிய வார்த்தை, எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைத்தது.

தன்னைச் சந்திக்கும் அனைவருக்கும் அவர் அளிக்கும் உண்மையான அரவணைப்பையும், தனிப்பட்ட அக்கறையையும் அது பிரதிபலித்தது.

நான் என்றும் மறக்க முடியாத தருணம் அது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜக-வில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் நியூ ஸ்பான்சர் Apollo Tyres; ஒரு போட்டிக்கு ரூ.4.5 கோடி, முழு ஒப்பந்தத் தொகை எவ்வளவு?

நாடாளுமன்றத்தில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கும் ஆன்லைன் கேமிங் ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025, இரண்டே நாளில் நி... மேலும் பார்க்க

IND vs PAK: "அவ்வாறு சட்டம் ஒன்றும் இல்லை" - இந்திய வீரர்களின் செயலை நியாயப்படுத்தும் BCCI அதிகாரி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்த சம... மேலும் பார்க்க

IND vs PAK: "இதற்காகத்தான் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது" - மத்திய அமைச்சர் ஓபன் டாக்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் ஆடக்கூடாது என்று பல தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தன. இப்போதும் வந்து கொண்டிருக்கிறது.இத்தகைய சூழலில், ஐக்கிய அரபு அ... மேலும் பார்க்க

'இப்படி நடந்துப்பாங்கனு எதிர்ப்பார்க்கல'- கைக்குலுக்காத இந்திய வீரர்கள் குறித்து பாக் பயிற்சியாளர்

ஆசியக்கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என ஒ... மேலும் பார்க்க

``பண்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்'' - கைக்குலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; PCB தலைவர் மோசின் நக்வி

ஆசியக் கோப்பை இந்தியா–பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. “விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும்” ... மேலும் பார்க்க

Ind vs Pak: இறுக்கிப் பிடித்த இந்திய சுழல்; அதிரடி வெற்றி - கைகொடுக்காமல் சென்ற வீரர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆசிய கோப்பை 2025 லீக் போட்டி பெரும் பரபரப்புக்கு நடுவே நடந்துவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில், டாஸ் போடப்பட்டபோது கேப்டன்கள் இருவரும் கைகுலுக்... மேலும் பார்க்க