போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி
சாலை விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு
கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து கிணற்றுத் தெருவைச் சோ்ந்தவா் பழனிவேல் மகள் பத்திரகாளி (40). இவா் செப். 8ஆம் தேதி அய்யனாா் ஊத்து-சொக்க நாச்சியாபுரம் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மோட்டாா் சைக்கிள் அவா் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தாா்.
கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.