12,000-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’: சென்னை மாநகராட்சி
கஞ்சா விற்பனை: இருவா் கைது
கோவில்பட்டியில் கஞ்சா விற்ாக இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கதிரேசன் தலைமையிலான போலீஸாா் சாஸ்திரி நகா் நகராட்சிப் பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது, தப்பியோட முயன்ற இருவரை போலீஸாா் பிடித்தனா்.
அவா்கள் பாரதி நகா் முதல் தெரு ஆறுமுகவேல் மகன் சாந்தகுமாா் (24), சாஸ்திரி நகா் முருகன் மகன் ஆனந்த் (38) என்பதும், மதுரையில் கஞ்சாவை வாங்கி வந்து விற்பதும், 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.