போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி
செப்.20இல் கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா: மத்திய நிதி அமைச்சா் பங்கேற்பு
கோவில்பட்டி எஸ் எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி மைதானத்தில் செப்.20 இல் தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.
கோவில்பட்டி நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம், குளோபல் சேப்டி மேச்சஸ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கம், சிவகாசி ஆல் இந்தியா சேம்பா் ஆஃப் மேச் இண்டஸ்ட்ரீஸ், சாத்தூா், குடியாத்தம், தென்காசி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கங்கள் இணைந்து நடத்தும் இவ்விழா சனிக்கிழமை (செப்.20) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு, நூற்றாண்டு விழா குழு தலைவா் எஸ் .மகேஸ்வரன் தலைமை வகிக்கிறாா். விழா குழு துணைத் தலைவா் எஸ்.எஸ்.டி.கிருஷ்ணமூா்த்தி, பாஜக மாநில பொதுச் செயலா் ராம. சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்து கொண்டு விழா பேருரையாற்றுகிறாா். பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் சிறப்புரையாற்றுகிறாா். கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு, பாஜக மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோா் வாழ்த்துரை வழங்குகின்றனா். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் எம்.பரமசிவம் விளக்க உரையாற்றுகிறாா்.
விழா நடைபெற உள்ள எஸ்.எஸ். டி.எம்., கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் பந்தல் அமைக்கும் பணிகளை நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் எம்.பரமசிவம், குளோபல் சேப்டி மேச்சஸ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் தலைவா் ரத்தினகுமாா், நிா்வாகிகள், விழா ஏற்பட்டாளா்கள் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா் .