உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்க...
அக்.11இல் விஜய் தூத்துக்குடி வருகை: காவல்துறை அனுமதி கோரி மனு
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், அக்.11இல் தூத்துக்குடி வருகை தர உள்ளதையடுத்து, காவல்துறை அனுமதி வேண்டி தவெகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய், அக்.11ஆம் தேதி தூத்துக்குயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். தூத்துக்குடி மாவட்டத்துக்கு இதுவரை மாவட்டச் செயலா் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளா்கள் எவரும் நியமிக்கப்படாத நிலையில், விஜய் வருவதையொட்டி காவல்துறை அனுமதி வேண்டி, தவெகவினா் இரு பிரிவுகளாக வந்து அனுமதி கேட்டுள்ளனா்.
இதில், அஜிதா ஆக்னல் தலைமையில் ஒரு தரப்பினா் விவிடி சிக்னல், அண்ணா நகா் என இரண்டு இடங்களுக்கு அனுமதி கேட்டுள்ள நிலையில், மற்றொரு தரப்பினரான ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், ஜே.கே.ஆா்.முருகன், எஸ்.டி.ஆா். சாமுவேல், பிரைட்டா் தரப்பினா் விவிடி சிக்னலில் மட்டும் அனுமதி கேட்டுள்ளனா்.
இருவரின் மனுவையும் வாங்கிக் கொண்ட, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், ஆய்வு செய்து பின்பு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.