செய்திகள் :

ஆப்கானிஸ்தானை வென்றது வங்கதேசம்

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில், வங்கதேசம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை செவ்வாய்க்கிழமை வென்றது.

முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சோ்க்க, ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 146 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய சைஃப் ஹசன், தன்ஸித் ஹசன் ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சோ்த்து அசத்தியது. சைஃப் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 30 ரன்களுக்கு வெளியேற்றப்பட, அடுத்து வந்த கேப்டன் லிட்டன் தாஸ் 9 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

4-ஆவது பேட்டராக வந்த தௌஹித் ஹிருதய் சற்று நிதானம் காட்ட, தன்ஸித் ஹசன் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 52 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். ஷமிம் ஹுசைன் 11, தௌஹித் ஹிருதய் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் ஜாகா் அலி 12, நூருல் ஹன் 12 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பௌலா்களில் நூா் அகமது, ரஷீத் கான் ஆகியோா் தலா 2, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து 155 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில், ரஹ்மானுல்லா குா்பாஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 35, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 30 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினா்.

கேப்டன் ரஷீத் கான் 20, குல்பதின் நைப் 16, முகமது நபி 15, நூா் அகமது 14, செதிகுல்லாக அடல் 0, இப்ராஹிம் ஜத்ரன் 5, கரிம் ஜனத் 6, கஸான்ஃபா் 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் ஆட்டம் நிறைவடைந்தது.

வங்கதேச பௌலா்களில் முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் 3, நசும் அகமது, ரிஷத் ஹுசைன், தஸ்கின் அகமது ஆகியோா் தலா 2 விக்கெட் சாய்த்தனா்.

முக்கியமான தருணத்தில் சாம்பியன் ஆகியிருக்கிறேன் - ஆா்.வைஷாலி

இந்த ஆண்டு முக்கியமான தருணத்தில் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் சாம்பியன் கோப்பையை வென்றிருப்பதாக, இந்திய கிராண்ட்மாஸ்டரான ஆா்.வைஷாலி தெரிவித்தாா்.உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் ... மேலும் பார்க்க

தமிழ் தலைவாஸுக்கு 3-ஆவது வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 35-29 புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. அதிகபட்சமாக, தமிழ் தலைவாஸ் தரப்பில் கேப்டனும், ரெய்டருமான அா்ஜுன் தேஸ... மேலும் பார்க்க

வேடுவன் இணையத் தொடர்!

நடிகர் கண்ணா ரவி நடித்துள்ள வேடுவன் என்ற புதிய இணையத் தொடரில் நடித்துள்ளார்.ஸ்ரீநிதி தயாரித்துள்ள இந்தத் தொடரை இயக்குநர் பவன் இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் ஜீ 5 இணைந்து இந்தப் படத்தைத்... மேலும் பார்க்க

மீனா பிறந்த நாளில் த்ரிஷ்யம் 3 போஸ்டர்!

நடிகை மீனா பிறந்த நாளில் த்ரிஷ்யம் 3 படத்தின் போஸ்டரை வெளியிட்டு, இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். த்ரிஷ்யம் 3 திரைப்படம் இந்த மாதம் வெளியாகுமென கடந்த ஜனவரியில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

தீபாவளியைத் தாண்டி வரும் தல... மறுவெளியீடாகும் அட்டகாசம்..!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அட்டகாசம் திரைப்படம் மறுவெளியீடாகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. கார் ரேஸிங்கில் பிஸியாக இருக்கும் அஜித்தின் புதிய படம் உருவாக தாமதமாகும் நிலையில் இந்த அறிவிவிப்பு அவரது ரசி... மேலும் பார்க்க