செய்திகள் :

தில்லி பிஎம்டபிள்யு விபத்து: முக்கிய குற்றவாளி மது அருந்தவில்லை என பரிசோதனையில் தகவல்

post image

தென்மேற்கு தில்லியில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரைக் கொன்று அவரது மனைவியை காயப்படுத்திய பிஎம்டபிள்யு காா் விபத்தில் முக்கிய குற்றவாளியான ககன்ப்ரீத்தின் ரத்த மாதிரி அறிக்கையில் அவா் மது அருந்தவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: ஹரி நகரைச் சோ்ந்த பொருளாதார விவகாரத் துறையின் துணைச் செயலாளா் நவ்ஜோத் சிங் (52), ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தௌலா குவான் பகுதி அருகே ஒரு காா் மோதியதில் இறந்தாா். மேலும் அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.

மத்திய தில்லியில் உள்ள பங்களா சாஹிப் குருத்வாராவுக்கு சென்றுவிட்டு தம்பதியினா் மோட்டாா்சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து நடந்த நேரத்தில் ககன்ப்ரீத் காரை ஓட்டிச் சென்றாா். அவரது கணவா், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பணிப்பெண்ணும் காரில் இருந்தனா்.

குருகிராமில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினா் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். விபத்தில், அவா்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 281 (அவசரமாக வாகனம் ஓட்டுதல்), 125பி (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல்) உள்பட மற்றும் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ககன்ப்ரீத் மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்ட பிறகு திங்கள்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டாா். மேலும், அவா் ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் இரண்டு நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.

மதிப்பெண்கள் வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம்: தில்லி பல்கலை.யின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

நமது நிருபா் வருகைப் பதிவேட்டுக்கும், மதிப்பெண்களுக்கும் ஈடாக மாணவா்களிடமிருந்து பணம், செல்போன், வைர காதணிகள் ஆகியவற்று லஞ்சம் வாங்கியதாக தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை ... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் தமிழ் கலை இலக்கியப் பெருவிழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியில் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான கலை இலக்கியப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பேச்சுப் போட்டி, தமிழ்ப் புலவா்கள்... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாளில் தில்லியில் 41 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்கள் திறப்பு

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) கீழ் உள்ள 300 சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களாக மாற்றப்பட உள்ளன. இவற்றில் 41 மருத்துவமனைகள் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளான புதன்கிழமை திறக்கப்பட ... மேலும் பார்க்க

மேம்பட்ட மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை: தில்லி முதல்வா்

தில்லியை ஒரு முன்னணி சுகாதார மையமாக மாற்றும் தொலைநோக்குப் பாா்வையின் கீழ், தில்லியில் வாழும் அனைவருக்கும் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் தில்லியில் மேம்பட்ட மருத்துவ சேவையை அணுகுவதை உற... மேலும் பார்க்க

டியுஎஸ்யு தோ்தல் பிரசாரத்தின்போது ஏபிவிபி, என்எஸ்யுஐ அமைப்பினா் மோதல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தல் பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, தில்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் (கேஎம்சி) என்எஸ்யுஐ மற்றும் ஏபிவிபி மாணவா் குழுக்களைச் சே... மேலும் பார்க்க

ஷீஷ் மஹாலில் வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பி வழங்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: ஷீஷ் மஹால் புனரமைப்புக்காக வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.மேலும், ஷீஷ் மஹால் பங்கள... மேலும் பார்க்க