பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி வ...
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததாலும் மேட்டூர் அணைக்கு செவ்வாய்க்கிழமை 14,269 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை 8,641 கனஅடியாகக் குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்மட்டம் மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 119.59 அடியிலிருந்து 119. 18 அடியாகக் குறைந்தது.
அணையின் தற்போதைய நீர் இருப்பு 92.16 டிஎம்சியாக உள்ளது.