செய்திகள் :

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

post image

கேரள மாநிலம், வைக்கத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அந்த மாநில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கேரள மாநிலம், வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்துக்கு கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் சேத்தன் குமார் மீனா தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த விழாவில், வைக்கம் நகர் மன்றத் தலைவர் பிரீத்தா ராஜேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, தமிழில் கேரள முதல்வர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.

பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tribute to Periyar's staue in Vaikom

இதையும் படிக்க : தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு கனரக வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜம்முவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து முக்கியமான நெடுஞ்ச... மேலும் பார்க்க

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

மனிதர்களை இரண்டாவது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் விதமாக, ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தெர... மேலும் பார்க்க

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் அறிவித்துள்ளனர்.இந்தியாவும் கனடாவும் மீண்டும் தூதரக ரீதியிலான உறவுகளை மேம்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் ... மேலும் பார்க்க

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கர்நாடகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியர்களைக் கட்டுப்போட்டு கொள்ளையர்கள் பணம், நகையைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் விஜயபுரா மாவட்டத்தின் சாட்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃ... மேலும் பார்க்க

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பெரியாரின் போராட்டங்கள் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.நாடு முழுவதும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்வேறு கட... மேலும் பார்க்க

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.இன்று தன்னுடைய 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க