Canada: ``இந்திய தூதரகத்தை முற்றுகையிடுகிறோம்; இங்கே வராதீர்கள்'' - காலிஸ்தான் ஆ...
பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!
நடிகர் ஜூனியர் என்டிஆர் இயக்குநர் பிரசாந்த் நீல் திரைப்படத்துக்காகத் தன் தோற்றத்தை மாற்றி வருகிறார்.
தேவரா திரைப்படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார். டிராகன் எனப் பெயரிட்டப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முழு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிவரும் இப்படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகர் ஜூனியர் என்டிஆர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் உடல் எடையையும் கணிசமாகக் குறைத்திருக்கிறார்.
இதற்கான, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!