செய்திகள் :

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

post image

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவன தயாரிப்பில் நடிகர் அஜித் உள்ளிட்ட பலர் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அண்மையில் வெளியானது.

இந்தத் திரைப்படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, ஏஞ்சோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்கள் இசையமைப்பாளர் இளையராஜாவின் அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு அனுமதியின்றி பயன்படுத்துவது பதிப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது எனவும் இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்தப் பாடல்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும், ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த மனுவிற்கு படத்தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நெஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

The movie Good Bad Ugly has been removed from Netflix's OTT platform.

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

நடிகர் விடிவி கணேஷ் ஆவேசமாகப் பேசிய விடியோ வைரலாகியுள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ். இப்படத்தின் வெற்றிக்குப் பின் விடிவி கணேஷாக மாறினார். தொடர்ந்து, தமிழின... மேலும் பார்க்க

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

விஜய் விருதுகள் விழா மேடையில் அருண் பிரசாத் - அர்ச்சனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.பிக் பாஸ் பிரபலங்களான அருண் பிரசாத், அர்ச்சனா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் வ... மேலும் பார்க்க

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

ரஜினி - கமல் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல... மேலும் பார்க்க

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

நடிகர் ஜூனியர் என்டிஆர் இயக்குநர் பிரசாந்த் நீல் திரைப்படத்துக்காகத் தன் தோற்றத்தை மாற்றி வருகிறார். தேவரா திரைப்படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிற... மேலும் பார்க்க

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார். நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ளார். இவர் நடிப்பில் வெளியான மார்கோ ரூ. 120... மேலும் பார்க்க

பாட்மின்டன்: முதல் சுற்றில் சிந்து வெற்றி

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றாா்.மகளிா் ஒற்றையா் பிரிவில், இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரான சிந்து,... மேலும் பார்க்க