பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!
நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார்.
நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ளார். இவர் நடிப்பில் வெளியான மார்கோ ரூ. 120 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. பான் இந்தியளவில் தனக்கான மார்க்கெட்டையும் உன்னி முகுந்தன் உருவாக்கியுள்ளார்.
இறுதியாக, இவர் நடித்த ’கெட் செட் பேபி’ திரைப்படமும் நல்ல வரவேற்பையே பெற்றது.
இந்த நிலையில், உன்னி முகுந்தன் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார். ’மா வந்தே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கிராந்தி குமார் இயக்குகிறார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முதல் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் சர்வதேச தரத்தில் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது.
முக்கியமாக, படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கிறார். படத்தின் புதிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
இதையும் படிக்க: வேடுவன் இணையத் தொடர்!