விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!
விஜய் விருதுகள் விழா மேடையில் அருண் பிரசாத் - அர்ச்சனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
பிக் பாஸ் பிரபலங்களான அருண் பிரசாத், அர்ச்சனா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நடிகை அர்ச்சனா ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வைல்டு கார்டு மூலம் பங்கேற்று கோப்பையை வென்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர், பாரதி கண்ணம்மா தொடரில் நாயகனாக நடித்து கவனம் பெற்ற நடிகர் அருண் பிரசாத்தைக் காதலித்து வந்தார். இவர்களின் காதல் கடந்த பாஸ் சீசன் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் தெரியவந்தது.
இருவரும் தங்கள் குடும்பத்தின் ஒப்புதலுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த விஜய் விருதுகள் விழா மேடையில் அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
விஜய் தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் முன்னிலையில், அவர்கள் நெருங்கிய உறவினர்கள் உடன் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நடிகை அர்ச்சனா, ஆனந்த கண்ணீருடன் விஜய் தொலைக்காட்சியைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
இதன் தொடர்பான முன்னோட்ட விடியோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைராலாகியுள்ளது.
விஜய் விருதுகள் நிகழ்ச்சி வரும் 21 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!