செய்திகள் :

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

post image

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதையொட்டி அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை மணல் சிற்பம் வரைந்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பட்நாயகின் எக்ஸ் பதிவில்..

பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி ஒடிசாவின் புரி கடற்கரையில் பாரத் கி உதான் மோடி ஜி கே சாத் என்ற செய்தியுடன் 750 தாமரை மலர்களைக் கொண்ட எனது மணல் சிற்பம் என்று பதிவிட்டுள்ளார்.

பட்நாயகின் மற்றொரு பதிவில்,

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் அயராத அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன. ஜெகந்நாதர் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நாட்டிற்குப் பல ஆண்டுகள் சேவை செய்ய ஆசீர்வதிப்பாராக என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த மணற்சிற்பத்தைப் புரி கடற்கரையில் பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

தனது மணல் சிற்பங்களுக்காக சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட சுதர்சன் பட்நாயக், தேசிய மற்றும் உலகளாவிய நிகழ்வுகளைக் குறிக்க தனது கலையை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sand sculptor Sudarshan Patnaik has wished Prime Minister Narendra Modi on his birthday.

இதையும் படிக்க: இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

கர்நாடகத்தில் யூ டியூப் சேனல்கள் தொடங்கவும் உரிமம் பெறுவதற்கான நடைமுறையை கர்நாடக அரசு பரிசீலனை செய்து வருகிறது. கர்நாடகத்தில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மின்னணு ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில், 2 பெண் நக்சல்கள் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். எட்டப்பள்ளி தாலுக்காவில் உள்ள மொடாஸ்கே கிராமத்தின் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதா... மேலும் பார்க்க

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

சுதந்திர இந்தியா 100 வயதை அடையும் போதும், இந்தியாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி பணியாற்ற வேண்டும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை... மேலும் பார்க்க

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்த செய்யறிவு(ஏஐ) சர்ச்சை விடியோவை உடனடியாக நீக்குமாறு காங்கிரஸூக்கு பாட்னா உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்த... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

கோவா மாநிலம் கனகோனாவைச் சேர்ந்த 59 வயது முதியவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் ரூ. 80 லட்சம் பணத்தை இழந்துள்ளார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடியால் பலரும் பாதிக்கப்பட்டு தங்கள் பணத்தை இழந்து வ... மேலும் பார்க்க

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

டிஜிட்டல் அரெஸ்ட் எனும் இணையவழி மோசடியால் ஹைதராபாத்தைச் சேர்ந்த 76 வயது ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி மோசடி தற்ப... மேலும் பார்க்க