Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது" - நெகிழும் சதிஷ்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.
லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது.
டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய படத்தின் இயக்குநர் சதீஷ் மாஸ்டர், ``இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராகுல் சாருக்கு முதல் நன்றி. அடுத்த நன்றி இயக்குநர் மிஷ்கீன் சாருக்கு. இந்தப் படத்துக்கான டைட்டில் அவர்கிட்டதான் இருந்துச்சு.
அதைக் கேட்டதும் உடனே எங்களுக்கு சப்போர்ட் பண்ணி கொடுத்தார். மூன்றாவது நன்றி கவினுக்கு. கவினோட முதல் படத்துக்கு நான்தான் கொரியோகிராஃபர்.
நான் இயக்கும் என்னுடைய முதல் படத்துக்கு கவின்தான் ஹீரோ. இந்த கணெக்ஷன் ரொம்ப ஸ்பெஷல்னு நினைக்கிறேன்.
ஆர்ட் டைரக்டர் நாங்க கேட்டதையெல்லாம் ரொம்ப சிறப்பா செய்துகொடுத்திருக்கார்.
மிர்ச்சி விஜய் - கவினுக்குமான எனர்ஜி இந்தப் படத்துல சூப்பராக இருக்கும். அயோத்தி படத்துலதான் எனக்கு ப்ரீத்திய தெரியும். அவங்களோட நடிப்பைப் பத்தி சொல்லத் தேவையில்லை.
அவங்களும் எங்களோட சேர்ந்ததில் ரொம்ப மகிழ்ச்சி. விடிவி சார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்துல எனக்கு முதன் முதலில் சம்பளம் கொடுத்தது விடிவி கணேஷ் சார்தான்.
முதல் முதல்ல செக் அவர்தான் கொடுத்தார். அவராலதான் நான் பேங்க் அக்கவுண்ட ஓபன் பண்ணேன். என்னுடைய முதல் படத்துல அவரும் இருக்கிறார். அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.
இசையமைப்பாளர் ஜென்னுக்கும் கவினுக்கும் ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுது. அவங்களுக்குள்ள இருக்குற ப்ரெண்ட்ஷிப் எங்களுக்கு ரொம்ப யூஸ் ஆச்சு.
எல்லாத்தையும் விட என்னுடைய முதல் ஹீரோ கவின். இதை மாத்த முடியாது. என்னுடைய உழைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பும், யோசனைகளையும் சொல்லிட்டே இருப்பான்.
எங்களுடைய உழைப்பை உங்க முன்னாடி வச்சிருக்கோம். ஆதரவு கொடுப்பீங்கனு நம்புறேன்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...