Sleep: அலாரம் அடிப்பதற்கு முன்பே கண் விழித்துவிடுகிறீர்களா? அதற்கு அறிவியல் காரண...
Kiss: ``இந்தப் படத்தோட டைட்டில் பார்த்ததும் ஒருமாதிரி இருக்கும்; ஆனால்" - நடிகர் கவின்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.
`லிஃப்ட்' படத்தில் தொடங்கி `டாடா' வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது.
டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இந்தப் படத்தின் நாயகன் கவின் பேசியபோது, ``இது என்னுடைய ஆறாவது படம். இந்த மீட்டிங்ல நான் தாங்க்ஸ் பண்ணனும்னு நினைக்கிறதுல முதல் ஆள் உதவி இயக்குநர் விஷால்.
இந்தப் படம் பேசப்பட்டு இரண்டு வருஷம் லேட் ஆகிருச்சி. ஆனாலும் இந்தப் படத்துக்காக தொடர்ந்து உழைச்சிட்டே இருந்தார்.
அவர் நினைச்சிருந்தா வேற இடத்துக்கு போயிருக்க முடியும். ஆனால் அவர் இப்போ வரைக்கும் எங்களுக்காக இருக்கிறார்.
டெக்னீஷியன் டீம் சமீபமாக சில மணி நேரங்கள் மட்டுமே தூங்கி முழுக்க முழுக்க இந்தப் படத்துக்காக உழைச்சிட்டு இருக்காங்க. அதுக்காக ரொம்ப நன்றி.
மோகன் மகேந்திரன் சார், தயாரிப்பாளர் ராகுல் சார் இவ்வளவு தூரம் இந்தப் படத்தைக் கொண்டுவந்ததுக்கு நன்றி. எங்களுக்காக டைட் ஷெடியுல்லயும் பாடல் பாடிய அனிரூத் சாருக்கும், பாடல் எழுதிய விக்னேஷ் சிவனுக்கும் நன்றி.
இயக்குநர் அருண் ராஜ் அண்ணா பாடிகொடுத்திருக்கிறார். மிஷ்கின் சார் டைட்டில் கொடுத்திருக்கிறார். அவங்களோட உழைப்பை எங்களை நம்பி கொடுத்ததுக்கு நன்றி.
விஜய் சேதுபதி அண்ணன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கார். 10 நிமிஷத்துல ஸ்டூடியோ வந்து பேசிக் கொடுத்துட்டு போயிட்டார். அதெல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியாது.
விடிவி சாருக்கும் நன்றி. அவருடைய எனெர்ஜி படத்துலயும் அப்படியே வந்திருக்கும். வேற ஷூட் இருந்தும் கணேஷ் சார் எங்களுக்காக வந்திருக்கார்.
மிர்ச்சி விஜய் என்னுடைய முதல் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு தொகுப்பாளரா வந்திருந்தான். இன்னைக்கு அவர் நடிகர். அவரை தொகுப்பாளர் ஆக்காம, கெஸ்டாதான் வரணும்னு சொல்லியிருந்தேன்.
ப்ரீத்தி இதுல டோட்டலா வேற மாதிரி இருப்பாங்க. அவங்க ரசிகர்களுக்கு புது அனுபவமா இருக்கும். எங்களோட இணைந்ததுக்கு நன்றி.
கல்யாண் மாஸ்டர், பிரபு சார், தேவயானி மேடம் எல்லோரும் எங்களுக்காக நடிச்சிருக்காங்க. அவங்ககூடலாம் எனக்கு நடிக்கனும்னு ஆசை இருந்தது. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியிருக்கு.
இசையமைப்பாளர் ஜென்னுக்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கலைன்னு நினைக்கிறேன். பிளடி பெக்கர்லயே அது நடந்திருக்கனும். ஆனால் அது அப்படி நடக்குறது இல்லை.
தொடர்ந்து உழைப்பை போட்டுக்கிட்டே இருப்போம். இந்தப் படத்துல அவருடைய உழைப்பு ரொம்பப் பெருசு.
இந்தப் படத்தோட டைட்டில் பார்த்ததும் ஒருமாதிரி ஜாலியான படம்னு தோணும். ஆனால் உண்மையிலேயே இது குடும்பத்தோட எல்லோரும் ஜாலியா பாக்குறமாதிரியான படமா இருக்கும்.
ஒரு படம் ஜெயிக்கிறதே குடும்பத்தோட வந்து பார்க்கும் ரசிகர்களாலதான். இந்தப் படமும் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி." எனப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...