அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
திராவிடக் கொள்கை தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளதாகவும், அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியுள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுகவுக்கு மாற்று, மாற்றம் என்று கூறியவர்கள் எல்லாம் மறைந்துபோனதாகவும், தமிழ்நாட்டை ஒருநாளும் தலைகுனிய விடமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் கோடாங்கிப்பட்டியில் திமுகவின் முப்பெரும் விழா இன்று (செப். 17) பிரமாண்டமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
எதிர்க்கட்சித் தலைவருக்கான மாண்பை அறியாதவர் எடப்பாடி பழனிசாமி. திராவிடக் கொள்கை தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அண்ணாயிஸத்தை அமித் ஷாவிடம் அடிமையிஸமாக அவர் மாற்றியுள்ளார்.