செய்திகள் :

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

post image

பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்த விவகாரத்தில் போட்டியின் நடுவரை நீக்கக் கோரிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி மீண்டும் நிராகரித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் சுண்டப்படும்போதும், போட்டி நிறைவடைந்த பிறகும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. இந்த விஷயம் மிகப் பெரிய பேசுபொருளானது.

இதனையடுத்து, பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் எனவும், அவர் நீக்கப்பட வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிட்டது. அதனை ஐசிசி நிராகரிக்கவே, இரண்டாவது முறையாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆண்டி பைகிராஃப்டை நீக்கக் கோரி முறையிடப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை மீண்டும் ஒருமுறை ஐசிசி நிராகரித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆசிய கோப்பையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதவுள்ளன. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததால், இன்று போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஐசிசி தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையேயான இன்றையப் போட்டிக்கு ஆண்டி பைகிராஃப்ட் நடுவராக தொடர்வார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் விளையாட மறுத்தால், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முழுமையாக புள்ளிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் ஹோட்டல் அறையிலேயே இருக்குமாறு அவர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

The ICC has once again rejected the Pakistan Cricket Board's request to remove the match umpire for refusing to shake hands with Pakistani players.

இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி2... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; ஆஸி.க்கு 293 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சண்டீகரில் இன்று ... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவ... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகியுள்ளார்.ஆஸ்திரேலிய மகளிரணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வரு... மேலும் பார்க்க

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிவேகமாக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மந்தனா இந்த சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான... மேலும் பார்க்க

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக நம்.1 இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு இந்தியா முழுவதும் உள்ள கிரி... மேலும் பார்க்க