திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!
விஜய் சுற்றுப்பயணம்: "நானும், விஜயகாந்த்தும் இத எப்பவோ பாத்துட்டோம்" - சரத்குமார்
திருச்சியில் அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கி வார வாரம் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்களைச் சந்திக்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். திருச்சி, அரியலூரில் அவரைக் காண வந்த கூட்டம் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. 'ரசிகர்கள் கூட்டத்தின் ஓட்டு, வாக்காக மாறுமா?' என்பதே தவெக கட்சியினரிடையே விவாத பொருளாகியிருக்கிறது.

இந்நிலையில் விஜய்க்கு அரசியல் சுற்றுப் பயணத்தில் கிடைத்திற்கும் வரவேற்பு குறித்துப் பேசியிருக்கும் பாஜக-வைச் சேர்ந்த நடிகர் சரத்குமார், "1996-ல் நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்துவிட்டுதான் நானும் அரசியலுக்கு வந்தேன். Retirement-க்குப் பிறகு நான் அரசியலுக்கு வரவில்லை.
மதுரையில் எனக்கும்தான் மாபெரும் கூட்டம் கூடியது. கூட்டம் எல்லாம் ஓட்டா மாறும்னு நினைச்சுட்டு இருந்தா அந்த எண்ணத்த மாத்திக்கோங்க. இதையெல்லாம் நானும், விஜயகாந்த்தும், சிரஞ்சீவி எப்போவோ பாத்துட்டோம். நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டுவிட்டோம்.

இன்னும் நீங்கள் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை. நாங்கள் இன்னும் களத்தில் இறங்கவில்லை. அமைதியாக உட்கார்ந்திருக்கிறோம். நாங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறோம். களத்தில் இறங்கிச் செயல்படும்போது எல்லோரும் பாஜகவின் சக்தியைப் பார்ப்பீர்கள்.
1967ம் ஆண்டு ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தது. 1977ம் ஆண்டு ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்தது, 2026ம் ஆண்டு நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs