ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகி...
சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!
சத்தீஸ்கர் மாநிலத்தில், 12 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப்.17) சரண்டைந்துள்ளனர்.
நாராயணப்பூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 12 பேர் பாதுகாப்புப் படையினரிடம் இன்று சரணடைந்துள்ளனர்.
இந்நிலையில், சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளை பிடிக்க ஏற்கெனவே ரூ.18 லட்சம் வெகுமதியாக அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், 5 பெண்கள், 3 ஆண்கள் தற்போது சரணடைந்துள்ளதாகவும், காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நாட்டில் உள்ள மாவோயிஸ்டுகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் 928 மாவோயிஸ்டுகளும், 2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதத்தில் மட்டும் 718 மாவோயிஸ்டுகளும் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?