செய்திகள் :

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

post image

உத்தரப் பிரதேசத்தில், பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகள் காவல் துறையின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பரேலியில் உள்ள பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியின், விட்டின் வெளியே கடந்த செப்.12 ஆம் தேதி அதிகாலை 3.45 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இந்தத் தாக்குதல் குறித்து, வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகள் ரோஹித் கோதாரா - கோல்டி பிரார் குழுவைச் சேர்ந்த ரவிந்திரா மற்றும் அருண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், குற்றவாளிகள் இருவரையும் காசியாபாதின் ட்ரோனிகா நகரத்தில், நொய்டா சிறப்பு அதிரடிப் படை மற்றும் தில்லி காவல் துறையினர் இன்று (செப்.17) சுற்றிவளைத்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் ரவிந்திரா மற்றும் அருண் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி தற்போது பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

In Uttar Pradesh, the accused who opened fire outside the house of popular Bollywood actress Disha Patani were shot dead in a police encounter.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை(செப். 18) காலை செய்தியாளர்களுடன் பேசுகிறார். இந்தத் தகவலை காங்கிரஸ் தலைமை இன்றிரவு வெளியிட்டுள்ளது.Tomorrow 18 Sept, Special Press Briefing by the Lead... மேலும் பார்க்க

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

நாடு முழுவதும் இருந்து வந்த பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.மக்கள் தன் மீது கொண்டுள்ள அன்பும் நம்பிக்கையும் தனது வலிமையின் ஆதாரங்கள் எனக் குறிப்பிட்டு... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில், 12 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப்.17) சரண்டைந்துள்ளனர். நாராயணப்பூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 12... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் கடம்ப மரக் கன்று ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்.17) பாஜக ஆளும் மா... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாக, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின், 75 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்.17), பாஜக ஆளும் மாந... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், வெள்ளத்தில் தனது சைக்கிள் சேதமானதற்கு அழுத 6 வயது சிறுவனுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதிய சைக்கிளை பரிசளித்துள்ளார். பஞ்சாபில் வெள்ளத... மேலும் பார்க்க