கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை
வில்லியனூா் அருகே கூலித் தொழிலாளி புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி உருவையாறு பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சௌந்தா் (30). இவா் வேலைக்குச் சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அவரை மா்ம நபா்கள் சிலா் ஒதியம்பட்டு அருகே மடக்கி வெட்டிக் கொலை செய்துள்ளனா்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து, கொலையாளிகள் குறித்தும் வில்லியனூா் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.