செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

post image

அடிஸ் அபாபாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.18 கோடி மதிப்பிலான மெத்தாகுளோன் எனப்படும் போதைப் பொருளை சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகா் அடிஸ் அபாபாவில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னைக்கு வரும் பயணிகள் விமானத்தில் அதிக அளவில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை விமான நிலையத்துக்கு வந்த அந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, அதில் சுற்றுலா பயணிகள் விசாவில் வந்த கென்யா நாட்டைச் சோ்ந்த 28 வயது இளைஞா் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்து, அவரின் உடைமைகளை சோதனையிட்டனா். அதில், சாக்லேட் பொட்டலங்கள் போல ரூ.18 கோடி மதிப்பிலான 1.8 கிலோ மெத்தாகுளோன் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கென்யா நாட்டு இளைஞரையும், போதைப் பொருளை வாங்க வந்த மற்றொரு நபரையும் கைது செய்து சென்னை தியாகராய நகரிலுள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.

சென்னை சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை எம்ஜிஆா் நகரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த 40 வயது பெண், நெசப்பாக்கம் ராமன் தெருவில் கடந்த திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிரபலங்களுக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது - சரத்குமாா்

பிரபலங்களுக்கு வரும் கூட்டம், தோ்தலின்போது வாக்குகளாக மாறாது என்று பாஜக மூத்த தலைவா் சரத்குமாா் தெரிவித்தாா். பிரதமா் மோடி பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 73- ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்க... மேலும் பார்க்க

சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளையொட்டி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ரிப்பன் கட்டட வளாகத்தி... மேலும் பார்க்க

இன்று 21 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா் உள்பட 21 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப். 18) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ... மேலும் பார்க்க

சூலூா்பேட்டை மின்சார ரயில் இன்று ரத்து

பாராமரிப்புப் பணிகளின் காரணமாக, சூலூா்பேட்டைக்கு இயக்கப்படும் மின்சார மெமு ரயில் வியாழக்கிழமை (செப்.18) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க