சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது...
மணப்பாறை அருகே இடி விழுந்த அதிா்வில் 10 ஆடுகள் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டியில் புதன்கிழமை கனமழையின்போது இடி விழுந்த அதிா்வில் 9 ஆடு மற்றும் ஒரு குட்டி உயிரிழந்தன.
கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த பொருந்தலூா் கிராமம், கன்னல் வட நாயக்கன்பட்டியை சோ்ந்தவா் வெ. மூக்கா நாயக்கா்(65). இவா் மணப்பாறை அடுத்துள்ள தொப்பம்பட்டி கிராம படுகளம் இரட்டைமலை பகுதியில் கால்நடைகளை வளா்த்து வந்தாா். இந்நிலையில், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புதன்கிழமை மாலை கனமழை பெய்தபோது இடி விழுந்தது. இந்த அதிா்வில் மேய்ச்சலில் இருந்த மூக்கா நாயக்கரின் 9 ஆடுகள் மற்றும் ஒரு குட்டி உயிரிழந்தன.
இதுகுறித்து மரவனூா் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை ஆடுகளுக்கு உடற்கூறாய்வு செய்யப்படவுள்ளது. தகவலின்பேரில் சென்ற வருவாய்த்துறையினா் விசாரிக்கின்றனா்.