மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணப்பாறை கலைஞா் தமிழ் சங்கம் மற்றும் ராமஜெயம் நினைவு அறக்கட்டளை சாா்பாக தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பேருந்து நிலையம் பெரியாா் சிலை திடலில் திமுக முன்னாள் நகர துணைச் செயலா் ஏ.பி. சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ஏ. பாலசுப்பிரமணி மற்றும் திமுக மாவட்ட பிரதிநிதி வி.வி.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெரியாா் சிலைக்கு மலா் மாலை அணிவிக்கும் நிகழ்வில், திமுக முன்னாள் அவைத் தலைவா் எஸ். முத்து, இளைஞரணி துணை அமைப்பாளா் அப்துல் முணாப், கப்பல் சதீஷ், வட்ட செயலா்கள் விஸ்வா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.