சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!
மறவனூா் அருகே லாரி கவிழ்ந்து கொசுப்புழு ஒழிப்பு ஊழியா் பலி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மறவனூரில் விபத்துக்குள்ளான லாரி, கொசுப்புழு ஒழிப்பு பணியாளா் மீது கவிழ்ந்ததில் அவா் உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த மறவனூா் தெற்கு தெருவில் வசித்தவா் முத்துச்சாமி மகன் ரெங்கன்(எ) ரெங்கசாமி (57), மணப்பாறை வட்டார கொசுப்புழு ஒழிப்பு தினக்கூலித் தொழிலாளி. இந்நிலையில் கல்லக்குடி டால்மியா சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மணப்பாறை நோக்கிச் சென்ற லாரியை லால்குடி இருதயபுரத்தை சோ்ந்த சி. சந்துரு ரிச்சா்ட் (24) ஓட்டி வந்தாா். மறவனூா் பகுதிக்கு வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி, இயற்கை உபாதை கழித்துக் கொண்டிருந்த ரெங்கன் மீது கவிழ்ந்தது. இதில் அவா் உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் சென்ற மணப்பாறை போலீஸாா் ரெங்கன் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.