விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்ற...
22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது.
ஜம்மு-காஷ்மீரில் பெய்து கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, கடந்த 22 நாள்களாக வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே வானிலை சற்று மேம்பட்டதன் காரணமாக புதன்கிழமை மீண்டும் யாத்திரை தொடங்கியது, இருப்பினும், மோசமான வானிலை காரணமாக நேற்று மாலை யாத்திரை மீண்டும் இடைநிறுத்தப்பட்டது.
வானிலை சற்று மேம்பட்டதையடுத்து, இன்று காலை முதல் மீண்டும் யாத்திரை தொடங்கியது. தற்போது யாத்திரை சீராக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைஷ்ணவி தேவி கோயிலுக்கு முன்பதிவு செய்ய கத்ராவில் மக்கள் குவிந்து வருகின்றனர். யாத்திரை மீண்டும் தொடங்கியது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.