செய்திகள் :

``செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின்'' - வீடியோ காண்பித்த எடப்பாடி பழனிசாமி

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.18) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி

"நான் டெல்லி சென்று வந்த பிறகு ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி இருக்கின்றன.

அமித் ஷாவுடனான சந்திப்பு வெளிப்படையானது. நான் முகத்தை மறைத்துக் கொள்ளவில்லை.

உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு காரில் திரும்பியபோது  முகத்தை கர்சீப் வைத்து துடைத்தேன்.

இதனை அரசியல் செய்கிறார்கள். வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது." என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் கோடு போட்டால் செந்தில் பாலாஜி ரோடே போட்டு விடுவார்" என்று கரூர் முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

அதே செந்தில் பாலாஜி எதிர்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் அவரை எப்படி பேசினார் என்பதை இந்த ஊடகங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று வீடியோ ஒன்றை செய்தியாளர்களிடம் போட்டுக் காண்பித்தார்.

அந்த வீடியோவில் செந்தில் பாலாஜி குறித்து பேசியிருக்கும் ஸ்டாலின், "செந்தில் பாலாஜியை பற்றி சொல்லவே தேவையில்லை. 15 முறை அமைச்சரவையை மாற்றியபோது இவரை மட்டும் மாற்றவே இல்லை.

முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜி
முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜி

சீனியர் அமைச்சர்களை எல்லாம் மாற்றினார்கள். ஆனால் இவரை மாற்றவில்லை.

ஏனென்றால் சசிகலாவிற்கு நெருக்கமாக, அதைவிட இளவரசிக்கு நெருக்கமாக இருந்தவர் செந்தில்பாலாஜி.

இடையில் ஜெயலலிதா அம்மா சிறைக்குச் செல்லும்போது யாரை முதல்வர் ஆக்குவது என்ற பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது.

கொள்ளையடிக்கிறது, ஊழல் செய்வது, ஆட்கடத்தல் என்று பாலாஜியும் அவரது தம்பியும் கரூரை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்" என்று விமர்சித்திருக்கிறார். வீடியோவைக் காண்பித்த பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, "இவையெல்லாம் அதிமுகவில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் சொன்ன கருத்து."

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின் இன்று அவருக்கு எப்படி அமைச்சர் பதவி கொடுத்தார்? கொடுப்பதைக் கொடுத்து பெறுவதைப் பெற்றார் செந்தில் பாலாஜி. இப்படிப்பட்டவர்கள் எங்களை விமர்சனம் செய்வதற்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``வடிவேலு, சிவாஜிக்கு கூடாத கூட்டமா? நடிகர்களுக்கு கூட்டம் கூடத்தான் செய்யும்!'' - ரகுபதி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி மீது ரகுபதி விமர்சனம்புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, "தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் பாதி வழியில் கழற்றி விடுபவர் எடப்பாடி பழனிசாமி என்பதற்கு டெல்லியில் அவர... மேலும் பார்க்க

பழனி: தார்ப்பாய் வீடுகள்; வனவிலங்கு அச்சுறுத்தல்கள்; மலசர் பழங்குடிகளின் அவலம் நிலை | Photo Album

பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்குடியினர்பழங்க... மேலும் பார்க்க

``கர்நாடகாவின் இந்தத் தொகுதியில் 6,018 வாக்குகள் அழிக்கப்பட்டுள்ளன; இது தொடர்கிறது!'' -ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு குறித்து பேச மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது... "நான் எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காத அரசு உயரதிகாரிகளுக்கு அபராதம்!’ - தாக்கலானது மசோதா

புதுச்சேரி சட்டப்பேரவையின் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 10-ம் தேதி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. அதையடுத்து மார்ச் 12-ம் தேதி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்... மேலும் பார்க்க

America: வட்டியை 0.25% குறைத்த அமெரிக்க ஃபெடரல் வங்கி; இன்னும் குறையலாம்! - ஏன் இத்தனை குறைப்புகள்?

நேற்று அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 பேசிஸ் பாயிண்ட் அதாவது 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்று தான். இருந்தாலும், இந்த வட்டி குறைப்பு என்ன செய்யும்,... மேலும் பார்க்க

கழுகார்: தாமரைக் கட்சியில் `புது' அணி டு ரகசிய பூஜை, பரிகாரங்கள்... வேண்டுதல் வைக்கும் உறவுக்காரர்!

தலைமை தாங்கும் பெண் நிர்வாகி!தாமரைக் கட்சியில் உருவானது புது அணி...தாமரைக் கட்சியில் தற்போதைய தலைவர் அணி... மாஜி அணி என ஏற்கெனவே பல அணிகள் இருக்கின்றன. அதில், மற்றொரு புதிய அணி வேகமாக பவருக்கு வந்திரு... மேலும் பார்க்க