ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்
Egypt: அருங்காட்சியகத்தில் இருந்த 3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காப்பு மாயம் - பின்னணி என்ன?
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் இருந்து, சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காப்பு ஒன்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரோ மன்னர் என்பவருக்கு சொந்தமானது என்று கூறப்படும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருளைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அருங்காட்சியகத்தின் ஆய்வகத்தில் இந்த தங்கக் காப்பு கடைசியாகக் காணப்பட்டிருக்கிறது.
இந்த விலைமதிப்பற்ற ஆபரணம், சீரமைப்புப் பணிகளின்போது காணாமல் போனதாக எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தங்கக் காப்பு நாடுவிட்டு நாடு செல்லாமல் இருக்க அல்லது கடத்தப்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதன் புகைப்படங்கள் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சில புகைப்படங்கள் காணாமல் போன காப்புடையது அல்ல என்றும், அது அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ள மற்றொரு காப்பின் படம் என்றும் அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குநர் தெளிவுபடுத்தியுள்ளார்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!