செய்திகள் :

இலங்கை உடன் பலப்பரீட்சை: வாழ்வா? சாவா? நிலையில் ஆப்கானிஸ்தான்!

post image

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றுக்கான கடைசி வாய்ப்பில் இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் இன்றிரவு மோதுகின்றன.

குரூப் பி பிரிவில் இன்னும் ஓர் அணியும் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப் ஏ பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் சூப்பர் 4 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.

இலங்கை அணி முதல் போட்டியில் ஹாங் காங், வங்கதேசத்துடன் வென்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தும் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகாமல் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி முதல் போட்டியில் ஹாங் காங் உடன் வென்று, வங்கதேசத்துடன் தோல்வியுற்றது.

ஆப்கானிஸ்தான் வென்றாலும் இலங்கை மோசமாக தோற்காமல் இருந்தாலே, சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், புள்ளிப் பட்டியலில் அவர்கள் 4+1.546 ஆக இருக்க, வங்கதேசம் 4-0.270ஆக இருக்கிறது.

ஆப்கன் புள்ளிப் பட்டியலில் 2+2.150-ஆக இருப்பதால் வென்றால் மட்டுமே சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதிபெறும். அதானால், இந்தப் போட்டி ஆப்கன் அணிக்கு வாழ்வா? சாவா? என்றிருக்கிறது.

Sri Lanka and Afghanistan will clash tonight in their last chance to qualify for the Super 4 round of the Asia Cup.

ஆஸி. மகளிரணியின் வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வி!

ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்திய மகளிரணிக்கு எதிரான போட்டியில் ஆஸி. மகளிரணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஆப்கானிஸ்தான் மக்களிடம் மகிழ்ச்சியை கொண்டுவர விரும்புவதாக ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதீன் நைப் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவி... மேலும் பார்க்க

மிடில் ஆர்டரில் கவனம் தேவை, இந்தியாவின் சவாலுக்குத் தயார்: பாகிஸ்தான் கேப்டன்

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா யுஎஇ போட்டிக்குப் பிறகு பேட்டியளித்துள்ளார். இந்த சிறப்பான வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்தச் சுற்றில் இந்தியாவுடனும் ம... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கேப்டனிடம் நடுவர் மன்னிப்பு: என்னதான் நடந்தது?

பாகிஸ்தான் கேப்டனிடம் நடுவர் ஆன்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி நேற்றிரவு யுஎஇ உடன் விளையாடியது. இந்நிலையில், பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்கவில்லை எனவும் நடுவரி... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி யுஎஇ அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி மீண்டும் இந்தியாவுடன் சூப்பர் 4 சுற்றில் விளையாட இருக்கிறது. நே... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையில் நீடிக்கிறது பாகிஸ்தான்: அமீரகத்தை வீழ்த்தி அபார வெற்றி!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் 10-ஆவது ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக பாகிஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் சோ்த்தது. ஃபகாா் ஜமான் அரைசதம் கடந்து ஸ்கோருக்கு பங்களிக... மேலும் பார்க்க