செய்திகள் :

2 பாகங்களாக உருவாகும் சிம்பு - வெற்றி மாறன் திரைப்படம்!

post image

நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை திரைப்படத்தின் காலகட்டத்தைத் தொட்டு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களமாக உருவாகி வருகிறது.

இதில் நாயகனாக நடிகர் சிலம்பரசனும் முக்கிய கதாபாத்திரங்களில் வடசென்னை திரைப்படத்தில் நடித்தவர்களும் நடிக்கின்றனர்.

அண்மையில், இப்படத்தின் புரோமோ பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. சிம்பு நடந்து வருவது போன்ற காட்சி இப்படம் வடசென்னை திரைப்படத்தை மையப்படுத்தி உருவாகி வருவதை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கான 1.15 மணி நேரக் கதையை எழுதி முடித்ததாகவும் மீதம் 5 எபிசோடுகள் அளவிற்கு கதை உள்ளதாகவும் இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

இதனால், இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வடசென்னை திரைப்படத்தின் 2 ஆம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த தகவலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: சிம்புவைத்தான் திருமணம் செய்வேன்... நடிகைக்கு டிஆர் பதில்!

silambarasan and vetri maaran movie could be a 2 Part film

கல்கியிலிருந்து தீபிகா நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

நடிகை தீபிகா படுகோன் கல்கி ஏடி படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் கல்கி 2898 திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் ... மேலும் பார்க்க

சிறகடிக்க ஆசை தொடருக்கு குவியும் வாழ்த்து!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.விஜய் தொலைக்காட்சியில் மகாநதி, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை உ... மேலும் பார்க்க

புனிதா தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

புனிதா தொடரில் இருந்து அமுதா பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை புவனா, அந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே டிஆர்பியில் முன்னணியில் உள்ளன. அந்தவகையில், தொடர்க... மேலும் பார்க்க

சிம்புவைத்தான் திருமணம் செய்வேன்... நடிகைக்கு டிஆர் பதில்!

நடிகையொருவர் சிலம்பரசனைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிலம்பரசனுக்கு தக் லைஃப் திரைப்படம் தோல்வியைக் கொடுத்தாலும் இவர் நடிக்கவுள்ள அடுத்தடுத்த படங்களின்... மேலும் பார்க்க

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

பிரதமர் மோடியின் பாடலுக்கு இசையமைத்ததால் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திரைத்துறையில் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைத்து வருகிறார். வெயில் திரைப்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

சாம்பியன்ஸ் லீக்கில் லிவர்பூல் கால்பந்து வீரரரும் எகிப்திய அர்சன் என்று அழைக்கப்படும் முகமது சாலா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அத்லெடிகோ மாட்ரிட் உடனான போட்டியில் லிவர்பூல் அணி 3-2 என த்ரில் வெற்ற... மேலும் பார்க்க