பறவை மோதல்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!
டிவிஎஸ் அப்பாச்சி 20-ஆம் ஆண்டு விழா எடிசன்!
டிவிஎஸ் அப்பாச்சியின் 20-ஆம் ஆண்டு விழா எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் அப்பாச்சி பிராண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, அப்பாச்சி பைக்குகளில் கூடுதல் வசதிகளுடன் 20 ஆம் ஆண்டுக்கான அனிவெர்சரி சிறப்பு எடிஷனை வெளியிட்டுள்ளது.
விழாவுக்கான சிறப்பு மாடல்களாக RTR 160, RTR 180, RTR 200 4V, Apache RTR310 மற்றும் RR310 போன்ற மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கருப்பு வண்ணத்தில் சாம்பெய்ன் தங்க நிற லைவரி டிசைனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கில், கூடுதலாக அலாய் வீல்களும் சாம்பெய்ன் தங்க நிறம் மற்றும் கருப்பு நிறங்கள் இணைந்த இரண்டு வண்ணத்தில் ஜொலிக்கின்றன.

அனிவெர்சரி எடிஷன் பைக்குகளின் அப்பாச்சி ஆர்.டி.ஆர். 160 -ன் ஆரம்ப விலையாக ரூ.1.38 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பாச்சி ஆர்டிஆர் 310 ரூ.3.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய பைக்குகள் நிறத்தில் மட்டுமே மாறுபாடுகளைப் பெற்றுள்ளன. ரேசிங் ரெட், மரைன் ப்ளூ மற்றும் மேட் பிளாக் ஆகிய வண்ணங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.