மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதி...
சென்னை, புறநகரில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
சென்னை, புறநகரில் இரவில் கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.
மழை நிலவரம் தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
காலையில் வெய்யில் சுட்டெரித்தாலும், சென்னை, அதன் புறநகரில் மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. தற்போது, சென்னை நகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், இரவில் சென்னை, அதன் புறநகரில் பலத்த மழை பெய்யும்.
தமிழகத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
டெல்டா மாவட்டங்கள் அடுத்த சுற்று மழைக்கு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: காஸா மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தீவிரம்! மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள்!!