ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்...
ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தான் பேட்டிங்; சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுமா?
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்கிறது.
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதிபெற இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Afghanistan won the toss and elected to bat against Sri Lanka in the Asia Cup.
இதையும் படிக்க: ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்