`என்ன இவ்வளவு தூரம் வளர்த்துவிட்டது நீங்கதான்; நாளைக்கு என்னோட படம் ரிலீஸ்...'- ...
அருந்ததி ராயின் புத்தக அட்டைப் படத்துக்கு எதிரான வழக்கு! மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் “மதர் மேரி கம்ஸ் டு மீ” எனும் புத்தகத்தின் அட்டைப் படத்தை எதிர்த்த பொது நல வழக்கு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எழுத்தாளர் அருந்ததி ராய் “மதர் மேரி கம்ஸ் டு மீ” (மேரி அன்னை என்னிடம் வருகிறாள்) எனும் புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகத்தில், எந்தவொரு எச்சரிக்கை வசனங்களும் இன்றி அருந்ததி ராய் புகைப்பிடிப்பது போன்ற அட்டைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், அட்டைப்படத்தில் உரிய சுகாதார எச்சரிக்கை வசனங்கள் எதுவுமின்றி புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பது சட்டவிதிகளை மீறுவதாகும் எனக் கூறி, உயர் நீதிமன்ற வழக்கறிஞரான ராஜசிம்மன் என்பவர் பொது நல வழக்குத் தொடர்ந்தார்.
இதுபற்றி, ராஜசிம்மன் அளித்த மனுவில்,
”புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள உள்ளடக்கம் குறித்து எனக்கு எந்தவொரு கவலையும் இல்லை. ஆனால், கட்டாயமாக்கப்பட்ட சுகாதார எச்சரிக்கைகள் இல்லாமல், புகைப்பிடிப்பதை காட்சிப்படுத்தியுள்ளது, சிகரெட் மற்றும் பிற புகையில பொருள்கள் (விளம்பரம் தடை மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஒழுங்குமுறை) சட்டத்தை மீறுவதாகும்.
நூலகம், புத்தகக் கடைகள் போன்ற இடங்களில் இடம்பெறும் உலகளவில் பிரபலமாக அறியப்படும் எழுத்தாளரான அருந்ததி ராயின் இந்தப் புத்தகம், இளம் தலைமுறையினர் இடையில் புகைப்பிடிப்பதை விளம்பரப்படுத்தி ஊக்குவிக்கும்” என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், புகைப்பிடிப்பது போன்ற அட்டைப்படம் இடம்பெற்றுள்ள இந்தப் புத்தகத்தின் பிரதிகளை விற்கவும், விநியோகிக்கவும், காட்சிப்படுத்தவும் தடை செய்ய வேண்டும், என அவரது பொது நல மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பறவை மோதல்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!